Dropbox என்பது நமது கோப்புக்களை இணையத்தில் பாதுகாப்பாக சேமிக்க உதவும் ஒரு சேவையாகும்.
இதில் நமது கோப்புக்களை இணைய வசதி உடைய எந்தவொரு இடத்திலிருந்தும் சேமிக்கவோ அல்லது ஏற்கனவே சேமிக்கப்படுள்ள நமது கோப்புகளைப் பெற்றுக் கொள்ளவோ முடியும்.
இதனால் நமக்கு தேயையான கோப்புக்களை Pen drive இல் கொண்டுபோகும் அவசியம் இல்லை. ஒருவேளை உங்கள் கணணியில் வைரஸ் தாக்கி உங்கள் கணணியில் உள்ள முக்கிய கோப்புகள் அழிந்தாலும் கவலைப்படத் தேவையில்லை. உங்கள் கோப்புக்கள் பத்திரமாக encrypt பண்ணப்பட்ட நிலையில் ஒன்றுக்கு மேற்பட்ட Dropbox Server களில் சேமிக்கப்பட்டு இருக்கும்.
ஒரு வேளை Dropbox இக்குள் இருக்கும் முக்கியமான கோப்புகளைதவறுதலாக நீங்கள் அழித்து விட்டாலும் பயப்படத் தேவையில்லைDropbox இல் அழித்த கோப்பை மீண்டும் பெற்றுக் கொள்ளக் கூடிய வசதி உண்டு.
இச் சேவையைப் பெற்றுக்கொள்வதற்கு முதலில் Dropbox இல் உங்களைப் பதிவு செய்து கொள்ளுங்கள் பின் உங்கள் கணணியில் Dropbox இனால் வழங்கப்படும் மென்பொருளை Install செய்து கொள்ளுங்கள். அப்பொழுதுஉங்கள் கணணியில் Dropbox என்ற ஒரு Folder உருவாக்கி இருக்கும்.
இனி நீங்கள் அந்த Dropbox folder இல் போடும் எந்த ஒரு கோப்பும் இணையஇணைப்புள்ள எந்தக் கணணியில் இருந்தும் www.dropbox.com என்ற தளத்தினுடாக அல்லது நீங்கள் நிறுவியுள்ள Dropboxமென்பொருளினூடாக பெற்றுக்கொள்ள முடியும்.
Dropbox மென்பொருளை உங்கள் கணணியில் நிறுவியவுடன் Public, Photosஎன்ற இரண்டு Folder கள் உருவாகியிருக்கும்.
இதில் Public என்ற Folder இனுள் போடும் கோப்புக்களை யாருடனும் பகிர்ந்து கொள்ளலாம் அந்த கோப்பின் மேல் Right click செய்து Public Link ஐ copyசெய்து email மூலமாகஅல்லது ஏதாவது சமூகவலைத் தளங்களின் மூலம் வேறு ஒருவருடன் பகிர்ந்து கொள்ள முடியும்.
அதே போல் Photos என்ற Folder இனுள் உங்கள் படங்கள் உள்ள Folder ஐ போட்டு விட்டு நீங்கள் போட்ட அந்த folder இனுள் Right click செய்து Copy Public Gallery link என்பதை Click செய்து உங்கள் Photo Gallery க்கான அந்த link ஐஉங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள முடியும்.
மேலும் Dropbox இக்குள் இருக்கும் விரும்பிய ஒரு Folder ஐ நீங்கள் விரும்பினால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள முடியும். இதன் மூலம் அந்த Folder இல்நீங்கள் போடும் கோப்புக்களை உங்கள் நண்பரும், உங்கள் நண்பர் போடும் கோப்புகளை நீங்களும் பயன்படுத்த முடியும்
மேலும் Dropbox இக்குள் இருக்கும் விரும்பிய ஒரு Folder ஐ நீங்கள் விரும்பினால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள முடியும். இதன் மூலம் அந்த Folder இல்நீங்கள் போடும் கோப்புக்களை உங்கள் நண்பரும், உங்கள் நண்பர் போடும் கோப்புகளை நீங்களும் பயன்படுத்த முடியும்
Dropbox இனுள் Public , Photos எனும் இவ் இரு Folder கள் தவிர மற்றைய Folder இனுள் போடும் உங்கள் கோப்புக்களை உங்களைத் தவிர வேறு யாராலும் பார்க்க முடியாது. (ஒருவேளை நீங்கள் குறிப்பிட்ட Folder ஐ Share பண்ணியிருந்தீர்கள் என்றால் நீங்கள் Share பண்ணிய அந்த நண்பரும் பார்க்க முடியும் )
Dropbox இல் நீங்கள் பதிவு செய்வதன் மூலம் இலவச 2 GB சேமிப்பிடத்தை பெற்றுக்கொள்ள முடியும். உங்கள் Dropbox கணக்கில் இருந்து உங்கள் நண்பர்களுக்கு அழைப்பு விடுத்து அவர்களை Dropbox இல் இணைப்பதன் முலம் உங்கள் சேமிப்பிடத்தை 8GB வரை அதிகரிக்க முடியும் .
Dropbox இனை கணணியில் மட்டுமல்ல iPhone, android போன்ற நவீனகையடக்கத் தொலைபேசிகளிலும் பயன்படுத்தலாம் என்பது இதன்இன்னொரு சிறப்பாகும்
மேலும் Dropbox இன் சிறப்பம்சங்களை அறிந்து கொள்ள இங்கேசெல்லவும்
Comments
Post a Comment