எங்களது மொழி தமிழ். நாங்கள் எங்களது மொழியை நேசிப்பவர்கள். இனைய தளங்களிலும் தமிழ் அருவி பாய வேண்டும் என்ற எண்ணமும் ஆசையும் எப்பொழுதும் எங்களிடம் இருந்துதான் வருகின்றது. பொதுவாக இணைய செயற்பாடுகள் அனைத்தும் பெரும்பாலும் ஆங்கில மொழியிலேயே காணப்படுகின்றன. அது ஒருபுறம் இருக்க, எங்கயாச்சும் தமிழ்ல டைப் பண்ண வேண்டிய ஒரு நிலைமை வந்தால், அவ்வாறு டைப் செய்வதற்கென்றே உருவாக்கப்பட்ட சில இணைய தளங்களிலோ, எங்களது கணணியிலோ, அல்லது வேறு முறையிலோ நாங்க டைப் செய்து பின்ன காப்பி செய்து பயன்படுத்த வேண்டிய இடத்துல பேஸ்ட் செய்ய வேண்டும். ஆனா, இதெல்லாத்தையும் விட இலகுவான ஒரு வழி கூகிள் மொழி பெயர்ப்பு (Google IME). இதை பதிவிறக்கம் செய்துகொண்டால், நீங்கள் உங்கள் கணனியில் எங்கு டைப் செய்தாலும் பொதுவான நடையில் இலகுவான முறையில் தமிழில் டைப் செய்துகொள்ள முடியும். விளக்கம் பின்வருமாறு... 1) இந்த இணைய தளத்துக்குச் செல்லவும் 2) ட்ராப் டவுன் மெனு மூலம் தமிழ் மொழியைத் தெரிவு செய்யவும். 3) உங்களது ஓபெரேடிங் சிஸ்டம் எத்தனை பிட் என்பதை தெரிவு செயுங்கள். (இது பற்றி நீங்கள் அற...