பொதுவாக கிராபிக்ஸ் வேளைகளில் ஈடுபடும் கணினி பாவனையாளர்களுக்கு தங்களது படங்களை (பிச்செர்ஸ்) அடிக்கடி ஒரு வடிவமைப்பிலிருந்து (format) இன்னொரு வடிவமைப்புக்கு மாற்ற நேரிடும். உதாரணமாக படங்கள் .jpg, .gif, .png என்று பல வடிவமைப்புக்களில் (format) காணப்படும். இவற்றில் உங்களது .gif வடிவில் அமைந்த படங்களை உங்களால்
facebook இல் இட முடியாது. இந்த நிலையில், உங்களது படங்களை நீங்கள் தேவையான அல்லது பொருத்தமான வடிவமைப்புக்களுக்கு மாற்றியே பதிவேற்றம் செய்ய வேண்டி ஏற்படும். அத்துடன் சில கிராபிக்ஸ் வேலைகளை செய்யும்போது அடிக்கடி அவற்றை மாற்றம் செய்ய வேண்டிய கட்டாயங்கள் ஏற்படலாம்.இவ்வகையான நேரங்களில் நம்மில் பெரும்பாலானோர் படங்களை கன்வெர்ட் (convert) செய்யகூடிய மென்பொருட்களை நிறுவி அல்லது ஆன்லைனில் தமது தேவைகேற்ப மாற்றி கொள்வர்.
இதில் உள்ள சிரமம் என்ன வென்றால் படங்களை உள்ளீடு (input) செய்து அதன் பின் தேவையான வடிவிற்கு மாற்றம் செய்ய வேண்டும். இது சற்று நேரம் செலவிட்டு செய்ய வேண்டியதாகவுள்ளது.
ஆனால் நான் தற்போது பகிரும் மென்பொருள் படங்களில் மேல் right click பண்ணலே தமக்கு ஏற்ரவடிவில் படங்களை மாற்றி கொள்ளல்லாம்.அதுதான் RIGHT CLICK IMAGE CONVERTER சிறப்பு
இதனை தரவிறக்கம் செய்துகொள்ள
Right Click Image Converter 2 2 0
Right Click Image Converter 2 2 3
Right Click Image Converter v2 5
இந்த மென்பொருள் பொதுவாக windows xp vista மற்றும் windows 7 போன்றவற்றில் பாவிக்கலாம்
rar வடிவிலான கோப்பினை பயன்படுத்தும் போது ரகசிய எண் கேட்டால் (pw) tecland என கொடுக்கவும்
Comments
Post a Comment