ஆரம்பிப்போமா? ஓகே! கூகிள் ஒரு சிரிப்புப் போலீஸ் தெரியுமா? எவ்வளவு பெரிய சர்ச் என்ஜினாக இருக்கும் கூகிள் தனக்குள் சில சுவாரஸ்யமான விடயங்களை உள்ளடக்கி வைத்துள்ளது. சிலர் தெரிந்திருக்கலாம். இது பற்றியே தெரியாதவர்களும் நம்மில் இருக்கலாம், என்னைப் போல். இது மாதிரியான சில கூகிள் சுவாரஸ்யங்களை இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.
நான் சொல்லப் போகும் அனைத்து மறைமுக குறியீடுகளையும் (secret codes) கூகிள் சர்ச் இல் இட்டு, "I'm Feeling Lucky" என்ற கூகுளின் சர்ச் ஐத் தொடுக்க வேண்டும். அப்படி நீங்கள் கூகிள் இன்ஸ்டன்ட் சர்ச் (instant search) அச்டிவே செய்திருந்தால், நீங்கள் இந்த சொற்களை டைப் செய்தவுடனோ, பேஸ்ட் செய்தவுடனோ, என்டர் (enter) பட்டன் ஐக் கிளிக் செய்ய முன் வரும் போப்அப் இல், "I'm Feeling Lucky" என்ற இடத்தில் கிளிக் செய்ய வேண்டியது முக்கியம். அப்படி இன்ஸ்டன்ட் சர்ச் (instant search) ஆக்டிவ் செய்யாமல் இருந்தால், சுலபமாக "I'm Feeling Lucky" இல் கிளிக் செய்தாலே போதுமானது.
Google Gravity இது உங்களது கூகிள் சர்ச் தளத்தை உடைத்து நொறுக்கி, எல்லாப் பாகங்களையும் கீழே விழச் செய்திடும். தேவை பட்டால், உங்களது மௌஸ் (mouse) உதவியுடன் பாகங்களைத் தூக்கி எறியலாம்.
Google Sphere இது உங்களது கூகிள் சர்ச் இல் உள்ள பாகங்களை, ஆட வைக்கும்.
Google Loco கூகிள் துள்ளிப் பாய்ந்து நடனமாடுவதை பார்க்க வேண்டுமா?
Annoying Google இது உங்களது கூகிள் சர்ச் இல் உள்ள எழுத்துக்களை மாற்றி மாற்றிக் காட்டும்.
Epic Google இது உங்களது கூகிள் சர்ச் இல் உள்ள எழுத்துக்களை தொடர்ச்சியாக பெரிதாக்கும். கடைசியில் எழுத்துக்கள் கணணி மொநிடோர் ஐ விட்டு வெளியே வந்துவிடும்.
Google Pacman கூகிள் இல் பக்மான் விளையாட வேண்டுமா?
Who's The Cutest யார் அழகானவர் என்று தெரிந்துகொள்ள வேண்டுமா?
Google Pirate கூகிள் இன் பைரேட் வேர்சன் பார்க்க வேண்டுமா?
Google Hacker உங்களது கூகிள் கணக்கு களவாடப் பட்டால் எவ்வாறு இருக்கும். இங்கே பார்த்துக்கொள்ளுங்கள்.
Comments
Post a Comment